2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அலைபேசி மீள்நிரப்பு அட்டைகளுடன் இருவர் கைது

ஆர்.கோகுலன்   / 2017 மே 23 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்.கோகுலன்

 

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்பல்வெல நகரில்,  குறைந்த விலைக்கு அலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை விற்பனை செய்துவந்த இருவரை, இன்று மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், 53,087 ரூபாய்  பெறுமதியான மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் 25,000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, 30 மில்லிகிராம் நிறையடைய ஹெரோயின் பக்கெட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பசறை, வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .