2021 ஜனவரி 27, புதன்கிழமை

மனித சுனாமிகளை எதிர்கொள்ள தயார்: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அபிவிருத்திக்கு குழி வெட்டும் அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை, வறுமையை இல்லாதொழிப்பதற்காக கொண்டுவரப்படவிருந்த திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.

இந்த நாட்டில் வாழ்ந்ததன் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தால் சாலச்சிறந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்து  உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின் இறுதிக்கட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .