2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வரவு செலவு திட்டத்தில் வடக்கு மக்கள் புறக்கணிப்பட்டுள்ளனர்: சரவணபவன் எம்.பி.

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டடுள்ளனர். இலங்கை அரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உலகத்துக்கு கூறிவந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் அப்படி எந்த நேரடி  திட்டங்களையும் உள்வாங்கியதாக தெரியவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'விவசாயிகளுக்கு வழங்கிய கடன்களை இரத்துச் செய்யும் அரசு, வடக்கில் விவசாயமே செய்ய முடியாமல் நிலைகுலைந்து போயிருக்கும் விவசாயிகள் குறித்து கவனம் செலுத்துமா?

போருக்கு துணைபுரிந்த படையினரின் வீடமைப்புக்காக ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைக்வோ அல்லது பாதிக்கப்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பட்ஜெட் விவாதங்களின்போது இவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .