Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2017 மே 31 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, 2 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பெறுதியான சொத்துகளைச் சேதப்படுத்தினர் என்று, குற்றம் சுமத்தப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட அறுவரையும், கொழும்பு பிரதான நீதவான், இன்று (31) பிணையில் விடுவித்தார்.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதியன்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உடைமைகள் சேதமாக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அந்த ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர, தன்னே ஞானாநந்த தேரர், அமில சந்தருவன், ரங்கன சமரதுங்க, அத்மா பிரியதர்ஷன, தினேஷா மதுரங்க ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இடம்பெறும் வழக்குத் தவணைகளுக்கு இவர்கள் முறையாக ஆஜராவதில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டதுடன், கடந்த மே மாதம் 19ஆம் திகதி இவர்கள் ஆஜராகியிருக்காததால், இவர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தங்களுடைய சட்டத்தரணிகளூடாக, இன்று (31) மன்றில் ஆஜராகியிருந்த அவர்களுக்கு, தலா 2,500 ரூபாய் ரொக்கப்பிணையில் செல்ல அனுமதித்த பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, வழக்கை ஓகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .