2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

திருட்டு ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருட்டுக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, பொரளை பொலிஸ் நிலையத்தின், போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் (ஓ.ஐ.சி) விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  

மேல் மாகாண சபையின் உறுப்பினர் ரொய்ஸ் பெர்ணான்டோவின், 50ஆயிரம் ரூபாய், தங்கம் மற்றும் இடிதாங்கி ஆகியவற்றை களவெடுத்தார் என்றே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.   

சந்தேகநபரான ஓ.ஐ.சி, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில், நேற்று (07)இரண்டாவது தடவையாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

சம்பவம் தொடர்பில், அடையாள அணிவகுப்பு இடம்பெற்ற போது, சந்தேநபர்கள் இருவரினால், அவர் அடையாளம் காணப்பட்டார். ஆகையால், அவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .