2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முன்னாள் தலைவரின் பயணத்தடை நீக்கம்

Thipaan   / 2017 ஜூலை 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியத் பந்து விக்ரம மற்றும் டபிள்யூ.எம்.நிஹால் கெப்படிபொல ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று (13) நீக்கியது.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் 319பேரை, தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தி அரசுக்கு 65 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில், பிரியத் பந்து விக்ரம, ஆர்.பி.சஞ்ஜயகுமார மற்றும் டபிள்யூ.எம்.நிஹால் கெப்படிபொல ஆகியோருக்கு எதிரான வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

ரியத் பந்து விக்ரம மற்றும் டபிள்யூ.எம்.நிஹால் கெப்படிபொல ஆகியோர் வெளிநாடு செல்லவேண்டி இருப்பதால், அதற்கு அனுமதி வழங்குமாறு, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தணிகள் கோரினர்.

இவர்கள் பலமுறை வெளிநாடு சென்றுள்ளனர் என்றும் கடமை நிமித்தம் வெளிநாடு செல்லவேண்டி ஏற்படுவதால், இருவரினதும் வெளிநாட்டுப் பயணத்தைடையை நீக்கி, நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .