Yuganthini / 2017 ஜூலை 19 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எகலியகொட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு இடையில் நேற்று (18) இரவு 9.15 அளவில் இடம்பெற்ற மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக எகலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில், 34 வயதுடைய மொஹமட் சஷிம் என்ற நபர் எகலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஏனைய மூன்று சகோதரர்களும் ஒன்றிணைந்து மூத்த சகோதரரைப் பொல்லால் தாக்கி, பின்னர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று சந்தேக நபர்களையும் எகலியகொட பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025