2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

நடனமாடி சிறுமியை மடக்கியவர் மாட்டினார்

Kanagaraj   / 2016 மே 30 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வைபவமொன்றில் நடனமாடிய சிறுமியுடன் நடனமாடி அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காஹாதுடு வெனிவெல்கொல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியையே அந்த படைவீரர், இவ்வாறு ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட படைவீரர், திருமணம் முடித்தவர் என்று அச்சிறுமியுடன் மூன்றுமாதங்கள் குடும்பம் நடத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

சிறுமியை கஹாதுடுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .