2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் படுகொலை: காதலனுக்கு மீண்டும் விளக்கமறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ, எம்.செல்வராஜா

பாணந்துறை வளான குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய, 23 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தீ வைத்து படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட, அந்த யுவதியின் 27 வயதான காதலனை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் நயந்த சமரதுங்க, இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

ஊவா கெட்டவல தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், கடந்த 2ஆம் திகதி, ஹாலிஎல, கெடவல, ஜஹுல்ல பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது வீட்டுக்கும் தீவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து சந்தேகத்தின்பேரில் அவரது காதலனெனக் கூறப்படும் 27 வயது நபரை, பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அந்நபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, பதுளை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபரை, நேற்று (18) முன்தினம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X