2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவர் கைது

Niroshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீடியாகொட

மீடியாகொட பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த 38 வயது நிரம்பிய நபரொருவரை திங்கட்கிழமை(18) கைது செய்துள்ளதாக மீடியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 கிராமும் 110 மில்லிகாரமும் எடைகொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறிற நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை இன்று பலபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மாளிகாவத்தை

மாளிகாவத்தை பகுதியில் ஹெரோய்ன் வைத்திருந்த 48 வயது நிரம்பிய நபரொருவரை திங்கட்கிழமை(18) கைது செய்துள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2கிராமும் 110 மில்லிகிராமும் எடைகொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகலுக்கமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை இன்று மாளிகாவத்தை நீதவான் முன்னலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மிரிஹான

போதைப்பொருள் விசேட சுற்றிவளைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மிரிஹான பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த நபரொருவர் திங்கட்கிழமை(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 25கிராமும் 710 மில்லி கிராமும் எடைகொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயது நிரம்பியவர் எனவும் தெஹிவளை பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை இன்று நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .