2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை இறக்காமம் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் கைதான இரு இளைஞர்களுக்கு 20 ஆயிரம் ரூபா  தண்டப்பணம் விதித்து அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.பிரிங்கி  புதன்கிழமை உத்தரவிட்டார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் 10 கிராம் மற்றும் 5 கிராம் கஞ்சாபோதைப் பொருளுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந் 22 வயது மற்றும் 23 வயதுடைய இளைஞர்களை கைதுசெய்யப்பட்டனர்

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள்  புதன்கிழமை  அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--