2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் குடும்பத் தலைவரான விநாயகமூர்த்தி (வயது 57), அவருடய மனைவி சுதர்ஷனி (வயது 47) மற்றும் இவர்களின் மகன்களான சுதர்ஷன் (வயது 27), சுகிர்தன் (வயது 21) ஆகியோரே காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தாருக்கும் அயல் வீடொன்றைச் சேர்ந்த மற்றுமொரு குடும்பத்தாருக்கும் இடையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சினையே இந்த சம்பவத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் வீடு புகுந்து இந்த வாள்வெட்டை நடத்தியதாக தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகினறனர். கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • bzukmar Tuesday, 13 November 2012 12:10 PM

    துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு வர, கத்தி,வாள் கலாச்சாரம் அரங்கேறுகிறதா?

    Reply : 0       0

    Sumathy M Tuesday, 13 November 2012 11:37 PM

    என்னப்பா இது? குடும்ப பிரச்சினைக்கு வாள் வெட்டா? தமிழ் மக்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திட்ட எங்கட தலைவர்கள் என்ன செய்யினம்?
    சுமதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .