2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்த வாழைச்சேனை பொலிஸார், அவரிடமிருந்து சிகரெட்டுக்களையும் வானொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரேதமாக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக வந்த வானுடன்; 300 பைக்கட் சிகரெட்டுக்களை கைப்பற்றியதுடன், வானின் சாரதியையும் மீராவோடைப் பகுதியில் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சிகரெட்டுக்கள் கல்முனையிலிருந்து கொண்டுவரப்பட்டு வாழைச்சேனையில்  விற்பனை செய்யப்படுவதாக வாழைச்சேனை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.  இது தொடர்பில்  பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையிலேயே வானுடன்  துருக்கியில் தயாரிக்கப்பட்ட 300 பைக்கட் சிகரெட்டுக்களை கைப்பற்றியதுடன்,  இச்சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், வானுடன் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுவந்த நிலையில் தப்பிச்சென்றதாகக் கூறப்படும் ஏனைய இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.காலிதீன் தலைமையிலான குழுவினரே வானுடன் சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .