2025 ஜூலை 12, சனிக்கிழமை

கஞ்சாவுடன் பெண்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 3 பெண்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வைத்தே இவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டனர்.

மோப்ப நாயின் உதவியுடன் இவர்களை கைதுசெய்ததாக தெரிவித்த பொலிஸார், அவர்களிடமிருந்து ஒருதொகை கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  அக்கரைப்பற்றில் உள்ள இரு வீடுகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 66 கிராம் கஞ்சாவையும் அட்டாளைச்சேனையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 28 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .