2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்,அப்துல்லாஹ்,ஜூட் சமந்த)

பங்கதெனிய, திகென்வெவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பளுகஸ்வெவ  தோட்டத்தில் பணியாற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே (வயது 35) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது வேலை முடிவடைந்து வீடு செல்லும்போது தினமும் மாலை வேளைகளில்   கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று கசிப்பு அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இவ்வாறே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு  இவர் மதுபானம் அருந்தச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவர் திரும்பிவராததை அடுத்து இவரைத் தேடிச்சென்று பார்த்தபோது, இவரது சடலம் திகன்வெவ  குளத்திலிருந்து மீட்கப்பட்டது

இதனை அடுத்து சிலாபம் பொலிஸார் மற்றும் திகன்வெவ பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .