2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணியில் ஆண் ஒருவரின் சடலம்  நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த இளையதம்பி விமலநாதன் (வயது 35) என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டினுள் உயிரிழந்து கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்;.

இவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து மறுநாளான நேற்று திங்கட்கிழமை காலைவரை தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் வளவையும் பேய்களின் தொல்லைகளிலிருந்து காப்பதற்காக பேய்களுக்கு கழிப்புச் சடங்கு செய்து காவல் பண்ணும் கிரியைகளில் ஈடுபட்டிருந்தார் என அவரது மனைவி பிரியதர்ஷப்னி சாட்சியமளித்துள்ளார். 

சமீப சில நாட்களுக்கு முன்னர் தனது கணவர் உண்ணாமலும் உறங்காமலும் அவஸ்தைப்பட்டவர் எனவும் இதனால் வைத்தியர்கள் இவரை மனநல சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் அவரது மனைவி பிரியதர்ஷப்னி மேலும் சாட்சியமளித்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நீதிவானின் உத்தரவுக்கு அமைய சம்பவ இடத்திற்குச் சென்ற  ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு உபபொலிஸ பரிசோதகர் எச்.பி.கே.விக்ரமநாயக்க, பொலிஸ் சார்ஜன்ட் ஏ.இஷற்.ஹஸன் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் ஆகியோர் சடலத்தை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .