2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

போதைப் பாணி மருந்துடன் இருவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இருமலுக்குப் பாவிக்கலாம் எனக்கூறி ஒரு வகைப் போதை நிறைந்த பாணி மருந்தை விற்றுக் கொண்டிருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்டபோது மேற்படி இருவரும் போதை பாணி மருந்துடன் சிக்கியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை பின்னிரவில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .