2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சாலியவெ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியன்குளம் பாதுகாப்பு வனாந்தரப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரைக் கைதுசெய்துள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து உபகரணங்கள், மின்சார ஜெனரேட்டர், துளைக்கும் இயந்திரம் மற்றும் வெடி மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிருவரும் சாலியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்ற பொருட்களையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--