2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

திருக்கோவிலுள்ள வீடொன்றில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகள் உள்ளிட்டவை  நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவ்வீட்டினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் 7 இலட்சம்  ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் பணத்தையும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் முதலாம் பிரிவு இராமசாமி வீதியிலுள்ள வீடொன்றிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

இவ்வீட்டின் மாடிப் பகுதிக்கான கதவு இல்லாத நிலையில் அதனூடாக வீட்டினுள்  உள்நுழைந்த கொள்ளையர்கள்  வீட்டு அறையிலுள்ள  அலுமாரியிலிருந்த தாலிக்கொடி, சங்கிலி உள்ளிட்ட தங்கநகைகளையும் 400 ரூபா பணம் கையடக்கத் தொலைபேசியொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வீட்டு உரிமையாளர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை உறக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோதே இவ்வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--