2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன் 

அநுராதபுரம் சாலியாபுர பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை நேற்று முன்தினம் மாலை (25) கைதுசெய்துள்ளதாக அநுராதபுரம் கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 27கிராம், 69மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி 5 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சாலியாபுர தெப்பங்குளம் 7ஆம் மைல்கல் பகுதியிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .