George / 2017 ஜூன் 08 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
“வடக்கில், 15, 20 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளே, தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் வடக்கின் மீன்பிடித் துறையை முன்னேற்றவே, இலங்கையின் பாரிய மீன்பிடித்துறைமுகத்தை, பருத்தித்துறையில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என, மீன்பிடி மற்றும் நீரகவள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா, பருத்தித்துறை அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘1980ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கின் மீன்பிடி, நாட்டின் மீன்பிடி துறையில், 40 சதவீதமாக காணப்பட்டது. பின்னர், 2009ஆம் ஆண்டாகும் போது, 4 சதவீதமாக குறைவடைந்தது.
“தற்போது அதனை 12 சதவீதமாக நாங்கள் கட்டியெழுப்பியுள்ளோம். பழைய தொழில்நுடப முறையே பயப்படுத்தப்பட்டு மீன்பிடி நடைபெறுகின்றது. நவீன தொழில்நுட்பத்துடனான படகோ, இறங்குதுறையோ இங்கு இல்லை.
“வடக்கின் மீன்பிடித்துறையை கட்டியெழுப்புதல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல் என்பவற்றை அடிப்படையாக்கக் கொண்டு நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
“இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வடக்கிலுள்ள இளைஞர் - யுவதிகளே பயன்படுத்தபடுவார்கள். தெற்கிலிருந்து யாரையும் அழைத்துவரப் போவதில்லை. இதனால் இங்கு காணப்படும் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
“ பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடிதுறைமுகத்தை அமைச்ச ஆசிய அபிவிருத்தி வங்கி நிதிவழங்க இணங்கியுள்ளது. இத்திட்டதால் யாரும் பாதிப்பட மாட்டார்கள். நாங்கள் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்குவோம்” என்றார்.
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago