2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானின் வெற்றியை மழை தடுக்குமா?

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்டின் நாளைய ஐந்தாம் நாளில் ஆப்கானிஸ்தானின் வெற்றி முனைப்புக்கு குறுக்கே பிரதான காரணியாக மழை காணப்படப்போகின்றது.

 மழையால் பாதிக்கப்பட்ட இன்றைய நான்காம் நாள் முன்னதாகவே முடிவுக்கு வரும்போது 398 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், 6 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43)

பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 5/55, மொஹமட் நபி 3/56)

ஆப்கானிஸ்தான்: 260/10 (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 87, அஸ்கர் ஆப்கான் 50, அஃப்ஸர் ஸஸாய் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 3/58, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/35, நயீம் ஹஸன் 2/61, தஜியுல் இஸ்லாம் 2/86)

பங்களாதேஷ்: 135/6 (துடுப்பாட்டம்: ஷட்மன் இஸ்லாம் 41, ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/46, ஸகிர் கான் 2/36)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X