2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஓய்வு பெற்றார் டி றொசி

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி சர்வதேச அணியின் முன்னாள் மத்தியகளவீரரும், இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முன்னாள் அணித்தலைவரும், மத்தியகளவீரருமான டேனியல் டி றொசி, தனது 36ஆவது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு றோமாவில் அறிமுகத்தை மேற்கொண்ட டேனியல் டி றொசி, 18 ஆண்டுகள் அங்கு செலவளித்தைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை மாதம் ஆர்ஜென்டீனக் கழகமான பொக்கா ஜூனியர்ஸில் இணைந்திருந்தார்.

உலகக் கிண்ணத்தை 2006ஆம் ஆண்டு வென்ற இத்தாலி அணியில் இடம்பெற்றிருந்த டேனிய டி றொசி, இத்தாலிக்காக 117 போட்டிகளில் 2004ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை விளையாடி 21 கோல்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, றோமாவுக்காக 459 சீரி ஏ போட்டிகளில் விளையாடி 43 கோல்களை டேனியல் டி றொசி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--