2021 ஜனவரி 27, புதன்கிழமை

சமநிலையில் ஷெஃபீல்ட் – யுனைட்டெட் போட்டி

Editorial   / 2019 நவம்பர் 25 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை சமநிலையில் மன்செஸ்டர் யுனைட்டெட் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் 19ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் ஜோன் ஃபிளெக், தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து போட்டியின் 52ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் முன்களவீரர் லைஸ் மூஸெட், தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் பிரண்டன் வில்லியம்ஸ், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்ததுடன், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற, மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மேஸன் கிறீன்வூட் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தவிர, அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார். எவ்வாறெனினும், போட்டியின் இறுதி நிமிடங்களில் ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் ஒளி மக்பேர்ணி கோலொன்றைப் பெற இறுதியில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .