Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்நாட்டில் நடைபெற்றுவந்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 18ஆவது 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் பிரேஸில் சம்பியனானது.
தமது தலைநகர் பிரேஸிலியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெக்ஸிக்கோவை வென்றே பிரேஸில் சம்பியனாகியிருந்தது.
சக மத்தியகளவீரரான யுகினியோ பிஸுட்டோவிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 66ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய மெக்ஸிக்கோவின் முன்களவீரரான பிரயான் கொன்ஸலேஸ் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.
எனினும், பிரேஸிலின் முன்களவீரரான கப்ரியல் வெரோனை, மெக்ஸிக்கோவின் பின்களவீரர் ஜெஸுஸ் கோமெஸ் விதிமுறைகளை மீறிக் கையாள வழங்கப்பட்ட பெனால்டியை பிரேஸிலின் முன்களவீரர் கையோ ஜோர்ஜ் போட்டியின் 84ஆவது நிமிடத்தில் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் சக பின்களவீரர் யன் கூட்டோ வழங்கிய பந்தை, மாற்றுவீரராகக் களமிறங்கிய பிரேஸிலின் பின்களவீரரான லஸாரோ கோலாக்க இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று பிரேஸில் சம்பியனாகியது.
நேற்றிரவு நடைபெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வென்ற பிரான்ஸ் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025