Editorial / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் நட்சத்திர மத்தியகளவீரரான போல் பொக்பா, உடற்றகுதியைப் பெற்றுள்ளபோதும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு விளையாட மறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு செப்டெம்பரில் நடைபெற்ற ஆர்சனலுக்கெதிரான போட்டியைத் தொடர்ந்து பாதக் காயமொன்று காரணமாக 26 வயதான போல் பொக்பா விளையாடாமல் இருந்து வருகின்றார்.
இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மியாமியில் நேரத்தைச் செலவளித்து வரும் பிரான்ஸ் சர்வதேச கால்பந்தாட்ட அணியினதும் மத்தியகளவீரரான போல் பொக்பா, கூடைப்பந்து விளையாடுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளர் ஒலெ குனார் சொல்க்ஜர், தாங்கள் கூடைப்பந்தாட்டம் விளையாடுவதில்லை எனவும், அவர் பயிற்சியில் ஈடுபடத் தயாரில்லை எனவும், சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி இடைவெளி ஆரம்ப்பத்தில் இன்னொரு சோதனையை போல் பொக்பா கொண்டிருந்ததாகவும் காயம் இன்னும் மாறவில்லை எனக் கூறியுள்ளார்.
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025