2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி மீண்டும் தேசிய அணியில்

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.  

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர்  போட்டியை முன்னிட்டு  வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் நோக்கில் இலங்கை

 வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட விசேட தெரிவுப் போட்டிஅண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.முன்னதாக இத்தொடருக்காக 35 பேர் கொண்ட பூர்வாங்க அணியொன்றை  இலங்கை  வலைப்பந் தாட்டச்  சம்மேளனம் அறிவித்திருந்தது. 

இதிலிருந்து 20 பேர் கொண்ட இறுதிக் குழுவைப்  பத்மா பெத்துவல  தலைமையிலான  தேர்வுக்  குழுவினர்  பெயரிட்டுள்ளனர். இதில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீராங்கனையான திசலா அல்கம, ஐந்து வருடங்களுக்குப்  பிறகு தேசிய அணிக்குள் இடம்பிடித்துள்ளார். 

உலக வலைப்பந்தாட்ட அரங்கில் கோல் போடுவதில் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் இலங்கை வலைப்பந்தாட்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார். 

இறுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 11ஆவது ஆசிய வல்லவர் சம்பியன்ஷிப் பட்டத்தை 9 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த தர்ஜினி, கடந்த வருடம் இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரிலும் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாகவும் இடம் பிடித்தார். 

எனவே, தர்ஜினியின் சேவையை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் இம்முறை ஆசிய வலைப்பந்தாட்டத்திலும் எதிர்பார்த்து அவரை தேசிய அணியில் இணைத்துக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். 

இதுஇவ்வாறிருக்க, வடக்கின் இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனையான எழிலேந்தினி சேதுகாவலவர்,  இம்முறை  ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் களமிறங்கவுள்ளார்.  

இந்த நிலையில், எஞ்சிய 15 வீராங்கனைகளையும் இலங்கை அபிவிருத்தி குழாத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் முன்னணி வலைப்பந்தாட்ட பயிற்சியாளர்களில் ஒருவரான ஷசிகா சமரசிங்க அபிவிருத்தி அணியின் பயிற்சியாளராக செயற்படவுள்ளார். 

தேசிய வலைப்பந்தாட்டச் சம்பியன் பட்டம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடை

யிலான வலைப்பந்தாட்டச் சம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று வருகின்ற ஹட்டன் நெஷனல் வங்கி அணியின் பயிற்சியாளராக இவர் செயற்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

அதுமாத்திரமின்றி, 2008 முதல்  2014 வரை  இலங்கை  வலைப்பந்தாட்ட  அணியின்  தலைவியாகவும், 2009 ஆசிய  வல்லவர் வலைப்பந்தாட்டச் சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது. 

இதுஇவ்வாறிருக்க,   தேர்வு செய்யப்பட்ட 20 வீராங்கனைகளில் இருந்து 12 பேரை ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் அழைப்பு வலைப்பந்தாட்ட தொடரில் பங்குபற்றச் செய்ய 

நடவடிக்கை எடுக்கவுள்ளது.இதற்கான விசேட தெரிவுப் போட்டியொன்று இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என 

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .