A.P.Mathan / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண கரையோர பகுதி மக்களுக்கான நவீன மாதிரி வீட்டுத் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளன என யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குறிப்பிட்டுள்ளார். தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே மேற்படி கருத்தினை அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள யாழ். கரையோரப்பகுதி மக்களில் வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் முகமாக யாழ். மாநகரசபைக்கு சொந்தமான காணியில், நவீன மாதிரி வீட்டுத்திட்டங்களை ஒரு மாதத்திற்குள் அமைத்துக்கொடுக்கவுள்ளதாக திருமதி யோகேஸ்வரி மேலும் குறிப்பிட்டார்.
யாழ். மாநகரசபை மேயராக பதவியேற்று செப்டெம்பர் 1ஆம் திகதியுடன் ஒருவருடங்களை பூர்த்திசெய்துள்ள திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தியிருக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவிபரங்களை காணொளியில் காணலாம். Video : Waruna Wanniarachi
23 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
38 minute ago