2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம்...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக்குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. 'வாழ்வு உரிமைக்கான உண்ணாவிரத போராட்டம் என்ற பதாதையின்' கீழ் பிரதான எதிர்க் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தமிழ்  தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.சுமந்திரன், ஸ்ரீதரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் ,அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன்   ஆகியோரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, விக்ரமாபாகு கருணாரத்ன, பாஸ்கரா, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான உள்ளிட்ட தென்னிலங்கையை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளும்  இவ் உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (ரொமேஷ் மதுசங்க)


  Comments - 0

 • Senthilan Monday, 04 March 2013 01:23 PM

  இதன் பிறகாவது நல்லது நடக்குமா?

  Reply : 0       0

  jenil fernando Monday, 18 February 2013 12:32 PM

  ரணில் நடவடிக்கை சிறந்தது.

  Reply : 0       0

  Bala Monday, 18 March 2013 11:42 PM

  அட, அட... என்ன புதுமையப்பா இது? ராஜபக்ஷ எதிரியானது சில வருடம் முன்னேதான். ஏகப்பட அனர்த்தம் நடந்தது ஐ.தே.க. ஆட்சியில்தான். இப்போ என்ன புது லவ்வு?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--