அரச விருது விழா

“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, எனும் தொனிப்பொருளில், இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கிகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்த, தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட எம்பியும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன், இந்த விருது விழாவில், விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க   வேண்டும் எனவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வருடாந்த ரீதியாக நடத்துவிக்க தீர்மானிக்கபட்டுள்ள இந்த தமிழர் பாரம்பரிய, நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழாவின், இவ்வாண்டுக்கான  விருது விழா, ஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் 

எழுத்து, பாடல், வாத்தியம், நாட்டியம், அறிவிப்பு, நெறியாள்கை, புகைப்படம், சினிமா, கிராமியக்கலைகள், சிற்பம், நுண்கலைகள் ஆகிய மற்றும் இங்கே சொல்லப்படாத அனைத்து கலைத்துறைகளையும் சார்ந்த, 18 வயதுக்கு குறையாத அனைத்து மூத்த, நடுத்தர, இளம் தமிழ் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

இந்த விழாவுக்கான விண்ணப்பங்களை, கொழும்பு - ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு தலைமையகம், கொழும்பு - பம்பலபிட்டியில் அமைந்துள்ள இந்து சமய கலாசார திணைக்களம், பிராந்திய அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிலும் அல்லது www.hindudept.govt.lk எனும் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

விண்ணப்ப இறுதி திகதி: 20-07-2019.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: பணிப்பாளர், இந்து சமய, கலாசார திணைக்களம், 248-1/1, காலி வீதி.


அரச விருது விழா

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.