Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 மே 22 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாக ராஜன், பிரதாப் போத்தன் என, பல நட்சத்திர பட்டாளத்துடன், ஜோதிகா நாயகியாக நடித்துள்ள, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம், எதிர்வரும் 29ஆம் திகதி இணையதளத்தில் வெளியாகிறது.
இந்தத் திரைப்படம் குறித்து கருத்து வெளியிட்ட ஜோதிகா, இது ஒரு, சமூக அக்கறையுள்ள த்ரில்லர் திரைப்படம் என்றும், ஐந்து இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
தான் நடித்த திரைப்படங்களிலேயே இதற்குத்தான், அதிகமாக உழைத்துள்ளதாக தெரிவித்த ஜோதிகா, இந்தத் திரைப்படத்தில் தானே டப்பிங் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் வெண்பா' என்ற வழக்கறிஞராக நடித்துள்ளதுடன், தனது திரைப்படங்களை, பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக ஜோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் அரசியலுக்கு வருவதற்கு ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் தனக்கு 41 வயதாகும் நிலையில், இந்த வயதில், கதையின் நாயகியாக நடிப்பது அரிது என்று கூறிய அவர், கொரோனாவால் தான் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு, இணையம் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறிய ஜோ, சினிமாவின் அடுத்தகட்டமாக இணையம் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago