2020 பெப்ரவரி 22, சனிக்கிழமை

இணையத்தில் சரக்கு; ஏமாந்த பிரபல நடிகை

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தில் மதுபானம் ஓர்டர் செய்த ஹீரோயினிடம் நாடகமாடி 35,000 ரூபாயை லாவகமாக சுருட்டிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழ் திரைப்படத்தில் சித்திரம் பேசுதடி-2 படத்தின் துணை கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி. மேலும் இவர் கிஸ், அசுரா, ஜஸ்பா உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், 3 தேவ், பாரிஸ் உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

கனடாவில் பிறந்த பிரியா பானர்ஜி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் மதுபானங்களை  ஓர்டர் செய்துள்ளார். மதுபானத்தை வீட்டிற்கு எடுத்து வருவதற்காக அவரது போன் நம்பரை கொடுத்திருந்தார். 

இந்தநிலையில் மதுபானத்திற்கு முதலில் பணத்தை செலுத்தியப் பிறகு மதுபானத்தை எடுத்து வருவதாக மர்ம நபர் பிரியா பானர்ஜியை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மதுவின் மீதான மயக்கத்தில் இருந்த பிரியா பானர்ஜி தனது டெபிட் கார்டு விவரங்களை முழுவதுமாக அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார்.  அதனையடுத்து, 23 ஆயிரம் பணத்தை லாவகமாக சுருட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த நடிகை பிரியா பானர்ஜி அந்த மர்ம நபருக்கு அலைபேசி செய்திருக்கிறார். தவறு நடந்து விட்டதாக வருத்தம் தெரிவித்த அந்த மர்மநபர் கூகுள்பே க்யூ.ஆர் கோடை அனுப்பி ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் பணத்தை அனுப்பி விடுவதாகத் தெரிவித்தார்.

இதையும் நம்பிய நடிகை கூகுள் பிளே கோடை ஸ்கேன் செய்யும் பொழுது மீதமிருந்த 13000 பணத்தை நூதனமாக திருடி விட்டு அலைபேசியை அணைத்து வைத்து விட்டார். மறுபடியும் தாம் ஏமாந்ததை உணர்ந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். 

இதுகுறித்து விசாரித்த பொலிஸார் எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றப்பட்டது என்பதை கண்டு பிடித்து உடனடியாக அந்த வங்கிக் கணக்கை முடக்குமாறு சம்மந்தப்பட்ட வங்கியிடம் கோரிக்கையை வைத்து முடக்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .