2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

“இப்போதைக்கு இல்லை”

J.A. George   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றிய திட்டங்களை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் எல்லாம் மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பது அவர்களது பெற்றோரின் விருப்பமாக இருந்து வருகிறது.

ஆனால் சில நடிகைகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் பலர்  சினிமாவில்  இருந்து விலகும் நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனால் தற்போதெல்லாம் நடிகைகள் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் தமன்னா, அனுஷ்கா, த்ரிஷா போன்றோர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரைத்துறையில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றிய திட்டங்களை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .