Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்கள் எதிர்மறையாய் இருந்தாலும் வசூலில் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அதை தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்திலேயே இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது .
அந்தக் கதையைக் கேட்ட சில நாயகர்கள் நடிக்கத் தயக்கம் காட்டவே, சந்தோஷ் பி ஜெயக்குமார் நடிக்கவும் உள்ளார்.
இதில் கரிஷ்மா, அக்ரிதி , ஷம்மு , டேனி, ரவி மரியா, சாம்ஸ், மனோபாலா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு,பேங்கொக் சென்று சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். மே மாத வெளியீட்டுக்குப் படம் தயாராகிவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026