2020 ஜூன் 04, வியாழக்கிழமை

ஒரு கோடி கொடுத்த சூர்யா; வைரமுத்து பாராட்டு

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் விவசாய மேம்பாட்டிற்காக நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் (இந்திய நாணயம்) வழங்கியதை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கிய இந்தப் படத்தில், விவசாயியாக நடித்திருந்தார் கார்த்தி. சூர்யா தயாரித்த இந்தப்படத்தைப் பார்த்த பெரும்பாலானோர் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழா நேற்று (24) நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, விவசாய மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாயும், விவசாயத்தில் சாதித்த 5 பேருக்கு தலா 2 இலட்ச ரூபாய் வீதம் 10ஈலட்ச ரூபாயும் வழங்கினார்.

சூர்யாவின் இந்தச் செயலை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். “அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த சிங்க மைந்தர்கள், வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். அன்பு சூர்யா, கார்த்தி... உங்களால் கலைக்குடும்பத்தின் சமூக மதிப்பு உயர்ந்திருக்கிறது. கலைத்தொண்டு தொடரட்டும்; காலம் கைதட்டும்” என ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் வைரமுத்து.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X