2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

’கதைத் திருட்டு’ சோமரத்ன, ரேணுகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைக்காட்சி நாடகத் தொடர் எழுத்தாளரும், சினிமா கதாசிரியரும், "முதற் கனவே" இணையத்தொடரின் இயக்குநருமான, நடராஜா மணிவாணனின் கதை ஒன்றை அவரது அனுமதியின்றி திரைப்படமாக தயாரிக்க பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க மற்றும் தயாரிப்பாளர் ரேணுகா பாலசூரிய ஆகியோருக்கு எதிராகவே இந்த கதை மோசடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குத் தொடரப்பட்டுள்ளமை தொடர்பிலான அறிவித்தல், சட்டத்தரணி ஜனக எதிரிசிங்க ஊடாக, இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க மற்றும் ரேணுகா பாலசூரிய ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மணிவாணன் தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காணாமற்போன ஒரு பிள்ளை, எதிர்காலத்தில் இனம் மற்றும் அடையாளம் மாறிய நிலையில், விசேடமான அடையாளம் ஒன்றை வைத்து கண்டுபிடிக்கப்படும் கருவை கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .