Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
 முதன்முறையாக  சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதன்முறையாக  சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 3ஆம் திகதி, அதாவது சிம்புவின் பிறந்தநாளில் தொடங்குகிறது. அரசியல் குறித்த படமான இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'மாநாடு' படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு.
இதனை சீமான் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகவுள்ளது. ஆனால், அனிருத் இசையமைப்பாளர் என்பதை சீமான் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை இது உண்மையெனில் சிம்பு படத்துக்கு அனிருத் இசையமைக்கும் முதல் படமாக இது இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
சீமான் - சிம்பு இணையும் இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.
அண்மைக்காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த சீமான், சிம்பு படத்தின் மூலமாக தற்போது இயக்குநர் அவதாரத்தை மீண்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

37 minute ago
41 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
7 hours ago
7 hours ago