2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சூர்யாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சூர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவரது அலுவலகம் பரப்பரப்பாக எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். 

இந்த நிலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் காலை அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், “ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்” எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். 

இதனையடுத்து, தேனாம்பேட்டை பொலிஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தது யார் என்பதுகுறித்து சைபர் கிரைம் பொலிஸார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த இளைஞர் புவனேஷ் (20) என்பவர்தான் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 

அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கெனவே முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் எனவும் தெரிந்தது. 

அவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .