Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நொமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களில் ஒருவரை எலிமினேட் செய்ய இன்று நாம் நொமினேஷன் படலம் நடைபெறுகிறது.
இதில் சேரனை நொமினேஷன் செய்கிறார் கவின். சேரன் பார்க்காத வெற்றி இல்லை என்றும், தேசிய விருது உட்பட பல வெற்றிகளை பார்த்த அவர் எங்களை போன்ற இளைஞர்களின் வெற்றிக்காக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதனால்தான் அவரை நொமினேட் செய்வதாக கவின் காரணம் கூறினார்.
அதேபோல் கவின் நொமினேட் செய்த இன்னொரு போட்டியாளர் ஷெரின் என்பது குறிப்பிடத்தக்கது.
சேரனை கவின் நொமினேசன் செய்த காரணத்திற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்து தனது வத்திக்குச்சி வேலையை தொடங்கியுள்ளார். 'நீ கூறிய காரணம் சரியில்லை' என்று வனிதா வாக்குவாதம் செய்தார்.
அதனை அடுத்து கடுப்பான கவின், சேரனை எனக்கு பிடிக்கவில்லை அவர் என்னை நொமினேட் செய்து வெளியே போ என்று சொன்னதால் பதிலுக்கு நான் நொமினேசன் செய்கிறேன், போதுமா? இப்ப திருப்தியா? என்று வனிதாவிடம் கவின் வாக்குவாதம் செய்ய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் ஓப்பன் நொமினேசன் என்பதால் யார் யாரை நாம் நொமினேஷன் செய்வார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வரும். இதனால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago