2020 ஜூன் 01, திங்கட்கிழமை

சேரனோடு சேர்த்து லொஸ்லியா வெளியேற்றம்?

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி விட்டார். இதையடுத்து லொஸ்லியா சற்று தெளிவானார், மேலும், கவினுடன் பேசுவதில் ஜாக்கிரதையாகவே இருந்து வந்தார்.

ஆயினும் அதையும் தாண்டி ஒரு சில இடங்களில் கவின் லொஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரீனுடன் சென்று பேசிய கதையும் நடந்துள்ளது . தற்போது கமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து லொஸ்லியா மற்றும் சேரனை வெளியேறி ஒரு அறைக்குள் செல்லுமாறு கூறினார்.

அதில் கமல் கூறும்பொழுது பிரியாவிடை கொடுத்து இருவரும் விடைபெறுங்கள் என்று கூறுகிறார். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதனிடையே கவின் லொஸ்லியாவிடம் ‘இப்போதாவது நான் சொல்வதை கேள்’ என கூற , அதற்கு லொஸ்லியா ‘ப்ளீஸ் நான் இப்போ தான் சந்தோஷமாக உள்ளேன்’ என சொல்லி விரட்டுகிறார். இதற்கான Promo வீடியோ வெளியாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X