2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட வனிதா!

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கிராமத்து கலைகளின் டாஸ்க் காரணமாக சண்டை சச்சரவு இல்லாமல் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்து வந்த ஹவுஸ்மேட்ஸ் தற்போது அந்த டாஸ்க் முடிவடைந்ததும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டனர்.

குறிப்பாக வத்திக்குச்சி வனிதா இன்று தனக்கு தானே 'மோஸ்ட் பாப்புலாரிட்டி' விருதினை வழங்கி கொண்டார். சேரனை இரண்டாவது இடத்துக்கும் லாஸ்லியாவை மூன்றாவது இடத்துக்கும் அவரே தெரிவு செய்தார். 

மேலும் யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் பாப்புலாரிட்டி என்பது திட்டு வாங்குவதையும் சேர்த்துதான் என்றும் கூறினார்.

நாளை கமல் வரும் நாள் என்பதால் இந்த வாரம் இதுவரை எந்த பஞ்சாயத்தும் இல்லாத நிலையில் இன்று அனேகமாக வனிதா ஒரு பஞ்சாயத்தை ஆரம்பித்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X