2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

தழுதழுத்த குரலில் திணறிய லொஸ்லியா

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்த பார்வையாளரின் பிரதிநிதியாக ஒருவர் கேட்கும் கேள்விக்கு பலசமயம் பார்வையாளர்கள் பதில் சொல்லி சமாளிக்க திணறுவது உண்டு

அந்த வகையில் இன்று ஒரு பார்வையாளர் லொஸ்லியாவிடம், 'சேரன் உங்கள் மீது வைத்திருப்பது உண்மையான பாசம். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பார் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசம் நாடகம் என்று கவின் சொன்னபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? என்று கேட்டார்.

இந்த கேள்வியால் லொஸ்லியாவைவிட கவின் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இந்த கேள்விக்கு 'எனக்கு எது உண்மை, எது பொய் என்பதில் குழப்பம் உள்ளது. நான் உண்மையாக இருக்கின்றேன் என்பது எனக்கு மட்டும் தெரியும். அதை நான் யாருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்று நினைக்கின்றேன்' என்று லொஸ்லியா கொஞ்சம் திணறியபடி தழுதழுத்த குரலில் கூறினார். 

இந்த ப்ரமோவில் பார்வையாளரின் கேள்விக்கு லொஸ்லியாவின் பதில் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் முழு நிகழ்ச்சியை பார்த்தால் புரியும் என தோன்றுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .