2021 மே 06, வியாழக்கிழமை

நடிகர் பாலாசிங் காலமானார்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நடிகர் பாலாசிங்(67) சிகிச்சை பலனின்றி இன்று (27) அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

காலை 10 மணி முதல் விருகம்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக பாலா சிங் உடல் வைக்கப்படுகிறது. பின்பு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

பாலாசிங், நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி, போன்ற படங்களில் நடித்தவர். 

மலையாளத்தில் அறிமுகம் ஆனாலும் குணச்சித்திர நடிகர் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் பாலாசிங்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .