2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

நாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி

Editorial   / 2020 நவம்பர் 30 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அதன் படி இன்று போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத இருவரை தேர்ந்தெடுத்து நாமினேட் செய்தனர். அது தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

அதில் சனம் ஷெட்டியை தான் முதலில் சிலர் நாமினேட் செய்கிறார்கள். சனம் அர்ச்சனா கூட்டத்துடன்  தொடர்ந்து மோதி வரும் நிலையில், சனம் ஷெட்டியை நாமினேட் செய்திருக்கிறார் அர்ச்சனா. மேலும் ஆரி பேசுவது பயமுறுத்தும் வகையில் இருக்கிறது என கூறி சிலர் நாமினேட் செய்திருககிறார்கள் .

மேலும் ரம்யா மற்றும் ரியோ இடையே சில தினங்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ரியோ, நிஷா, ஜித்தன் ராமேஷ் ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள். மேலும் அதிக நபர்கள் ஷிவானியையும் நாமினேட் செய்திருப்பது ப்ரொமோவில் காட்டப்பட்டு உள்ளது.

ஷிவானி பாலாஜியின் நிழலில் தான் எப்போதும் இருக்கிறார் என சொல்லி அவரை நாமினேட் செய்திருக்கிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .