2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

நயனின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ்

J.A. George   / 2020 நவம்பர் 19 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் உள்பட மொத்த திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நயன்தாரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று அவருக்கு மலையாளபடம் ஒன்றின் படப்பிடிப்பு என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட அறையில், சுற்றிலும் பலூன்கள் இருக்க, பிறந்த நாள் கேக்கை வெட்டி நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடினார். 

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் இந்த பிறந்தநாள் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் விக்னேஷ் சிவன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .