2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

’நான் நானாக இருக்கிறேன்’

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். கடந்த ஆண்டு, ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' திரைப்படத்திலும் விஜய் அன்டனியுடன் 'திமிறு புடிச்சவன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு, டுபாயில் தங்கியுள்ளார்.

 

அங்கு அவர் அளித்த பேட்டியொன்றில், தன்னை அடுத்த நயன்தாரா என்றும் அடுத்த தமன்னா என்றும் கூறுவது முட்டாள்தனமானது என்றும், தான் தானாக  நடித்து வருவதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, 'பொன் மாணிக்கவேல்', 'ஜெகஜால கில்லாடி', 'பார்ட்டி' போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாகக் கூறியுள்ள அவர், இது தவிர, விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படமும் துல்கர் சல்மானுடன் 'வான்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தான் பேசுவதை, மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நினைத்து, அமைதியாகவே இருப்பதாகவும், நி​வதா கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .