Editorial / 2020 மே 26 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் உருப்படியாக பல வேலைகளை செய்து பொழுதுபோகும் பல நட்சத்திரங்கள் மத்தியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரொம்பவே வித்தியாசமானவர்.
‘கீதா கோவிந்தம்’ என்கிற ஒரே திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற இவர் தற்போது மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் இவருக்கு ரசிகர்களும் ஏராளாம்.
இந்த ஊரடங்கு சமயத்தில் அடிக்கடி சமூக ஊடகங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடி பொழுதை போக்கி வருகிறார் ராஷ்மிகா.
அந்தவகையில் அண்மையில், கலந்துரையாடலில் ஈடுபட்ட ராஷ்மிகா, ‘தனது தற்போதைய பெயருக்கு பதிலாக வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்’ என ஒரு கேள்வியை வீசினார்.
உடனே ரசிகர்கள் ஆளாளுக்கு லில்லி, ரோஸி, கரிஷ்மிகா, ராதா என விதம் விதமான தங்களுக்கு பிடித்த பெயர்களாக கூற ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் ராஷ்மிகா என்கிற பெயரே தனித்துவமாக, உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago