2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: பிக்பாஸின் நோக்கம் நிறைவேறுமா?

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒருவரையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று சிறப்பு விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர். 

அபிராமி மற்றும் மோகன் வைத்யா குறித்து மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சாக்சியின் வருகை கவினுக்கும் லொஸ்லியாவுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஏற்கெனவே கவின் கூறிய கருத்துகளுக்கு வெளியில் பதிலடி கொடுத்துள்ள சாக்ஸி அதே கேள்விகளை கவினிடம் நேரடியாக கேட்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் சாக்ஸி உள்ளே வந்தவுடன் வத்திக்குச்சி வனிதா அவரை ஏற்றி விட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சாக்ஸி பொங்கி எழ வாய்ப்பு இருக்கிறது. பழி வாங்க காத்திருக்கும் சாக்சியைடம் கவின் சிக்குவாரா? கவின் நிலைமை என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

இந்த நிலையில் வெளியில் போனவர்களில் நீ மட்டும்தான் அப்படியே இருக்கின்றாய் என்று அபிராமியிடம் சாண்டி கூறுகிறார். அபிராமியும், மோகன் வைத்யாவும் கவின் குழுவினர்களுடன் சகஜமாக பேசி வரும் நிலையில் சாக்சி இப்போது வரை ஒரு முறைப்பு பார்வையை மட்டுமே பார்த்து வருகிறார். 

சாக்சியை பிக்பாஸ் உள்ளே அனுப்பியதன் நோக்கம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .