2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

‘புஷ்பா’வில்லனாக மாதவன்!

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘ரங்கஸ்தலம்’ இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில் நடக்கும் சந்தனக் கடத்தல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் வில்லனாக யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. முதலில் விஜய் சேதுபதியிடம் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 

பின்னர் அவர் வேறு சில படங்களில் பிசியாக நடித்து வருவதால் இந்தப் படத்திற்கு திகதிகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே விஜய் சேதுபதி இந்தப் பட வாய்ப்பை ஏற்க மறுத்தார்.

தற்போது நடிகர் மாதவன் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாதவன் இந்தப் படத்தில் நடிப்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
மாதவன் ஏற்கனேவே நாகசைதன்யா நடித்த ‘சவ்யாசாச்சி’ என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது மாதவன் அனுஷ்காவுடன் நடித்துள்ள ‘நிஷப்தம்’ பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--