2020 மே 29, வெள்ளிக்கிழமை

பிகில் இசை வெளியீடு; ரசிகர்களுக்கு விஜய் விடுத்துள்ள கோரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரசிகர்கள் யாரும் தமக்கு பதாகை வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் சுபஸ்ரீ , பதாகை விழுந்து விபத்தில் சிக்கி அண்மையில் உயிரிழந்தார்.

 இதனையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகளும் பதாகை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர யாரும் பதாகை வைக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளன. 

இந்நிலையில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் திகதி நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த யாரும் பதாகை வைக்கக் கூடாது என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருப்பதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X